புதுச்சேரிக்கு நாளை பிரதமர் வருகை: அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் வருகையையொட்டி நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் முதல் ராஜீவ்காந்தி சிக்னல் வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது.