சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை! ஈஎஸ்பிஎன்…

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என பிரபல  கிரிக்கெட் தொலைக்காட்சி  ஒளிரபப்பு நிறுவனமான  ஈஎஸ்பிஎன் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்வ சிஸ்கே அணியைச் சேர்ந்த சிலருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றும், சிஎஸ்கே அணியில் உள்ள  3 பேர் உள்பட  5 மைதான வீரர்கள்  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில், சிஎஸ்கே சிஇஓ காசிவிஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, வீரர்களை மைதானத்துக்கு அழைத்து வரும் பேருந்து கிளீனர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக இஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.