தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால், திரையில் வெளியிட தயாராக இருந்த அனைத்து படங்களும் ஓடிடி-யில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.

முதலில் தமிழில் உருவான ‘பெண்குயின்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ மற்றும் ‘குட்லக் சகி’ ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் நிதினுக்கு நாயகியாக நடித்துள்ள ‘ரங் தே’ படமும் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தையில் களமிறங்கியுள்ளது.

இதில் ‘மிஸ் இந்தியா’ படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.