ஸ்ரீஹரிகோட்டா:

ந்திரனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டு வரும் சந்திராயன்-2 விண்கலம் ஜூலை யிலேயே விண்ணுக்கு செலுத்த தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.  விண்கலத்தை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு தயாராக இருப்பதாக  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

இஸ்ரோ முதன்முறையாக கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை  வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக செயல்பட்ட நிலையில், சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை தயாரித்தது. இந்த விண்கலமான  நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்றும், அதற்காக  ரூ.800 கோடி மதிப்பில்  விண்கலம்  உருவாக்கப்பட்டு வந்தது.

இந்த விண்கலம் நிலவின் தென்துருவமுனையில், தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள நிலையில், அதனுடன் நிலவை  ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ரோவர் வாகனம் ஒன்றும் இணைக்கப்படுகிறது.

சந்திரயான்-2 விண்கலத்தை 2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால்  துரதிருஷ்டவசமாக  கடந்த மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப் பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைகோள்  தொடர்பை இழந்ததால், சந்திரயான்-2 திட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.  அதைத்தொடர்ந்து சில சிக்கல்கள் நீடித்ததால் திட்டம் தற்காலிகமாக  தள்ளி வைக்கப்பட்டது.

இதையயடுத்து  சந்திராயன்-2 விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானிகள் மீண்டும் துரிதப்படுத்தினர். அதைத்தொடர்ந்து,  ஜூலை 9 முதல் 16-ஆம் தேதிக்குள்ளாக விண்ணில் செலுத்த முடிவு செய்யப்படு இருப்பதாக  இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.

இதில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய உள்ள ரோவர் வாகனம் லேண்டர் பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஜூலை 9 முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உடன் ராக்கெட்டிலிருந்து, இந்த அமைப்பு பிரிக்கப்படும். அதன் பிறகு ஆர்பிட்டரின் உதவியுடன், நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றடையும்.

திட்டமிட்ட நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்ற உடன், ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரிலிருந்து நிலவின் பரப்பில் ரோவர் வாகனம் இறக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும்.

இந்த ரோவர் வாகனம் நிலவின் பரப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.