எஸ்பிபி குணம் அடைய கார்த்தி பிரார்த்தனை..

கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டி திரையிலகினர் கமல், ரஜினி,சிவகுமார், பாரதிராஜா, இளைய ராஜா, வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பிரார்த்த னையும் வாழ்த்தும் தெரிவித்து வருகின் றனர்.
இந்நிலையில் நாளை இயக்குனர் பாரதி ராஜா எஸ்பிபிக்காக கூட்டுபிரார்த்த னைக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார். இதில் திரையுல நட்சத்திரங்கள் மற்றும் தொழிலாளர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டு மாலை 6 மணி முதல் 5 நிமிடம் பாலசுப்ரமணியம் பாடலை ஒலிபரப்பி அவருக்காக அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி வெளியிட் டுள்ள மெசேஜில்,’எல்லோரும் இணைந்து மதிப்பிற்குரிய எஸ்பிபாலசுப்ரமணியம் விரைந்து குணம் அடைய நாளை மாலை 6 மணிமுதல் 5 நிமிடம் கூட்டு பிராத்தனை யில் பங்கேற்போம். எங்களின் இதயத்தில் முழுமையாக உங்களை நேசிக்கிறோம் எஸ்பிபி சார். விரைந்து குணம் அடைந்து வாருங்கள் ’என தெரிவித்திருக்கிறார்.