வரும் ஆண்டு மத்தியில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை

சென்னை

ரும் 2019 ஆம் வருடம் ஜூன் மாதத்துக்குள் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை அமைக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 1300 ரெயில்கள் தெற்கு ரெயில்வே இயக்குகிறது இந்த ரெயில்கலில் வருடத்துக்கு 80 கோடி பேர் பயணம் செய்கின்றனர். தெற்கு ரெயில்வே இந்த ரெயில்களில் தரத்தை உயர்த்த பல பணிகளை செய்து வருகிறது இவற்றில் முதன்மையாக சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூர் மற்றும் செண்டிரல் ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்களின் பெட்டிகளின் கழிவறைகள் மற்றும் மற்றும் நடைமேடைகள் இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இதில் செண்டிரலில் 225 ரெயில் பெட்டிகளும் எழும்பூரில் 185 பெட்டிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. இது தவிர 73 முக்கிய ரெயில் நிலையங்களில் சுத்தம் செய்யும் பணிக்கு தனியார் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தெற்கு ரெயில்வே இயக்கும் ரெயில்களில் 5443 பெட்டிகளில் பயோ கழிவறகள் அமைக்கப்பட்டுளன. மொத்தம் 6603 பெட்டிகளில் மீதமுள்ள பெட்டிகளில் பயோ கழிவறை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணி வரும் 2013 ஜூன் இறுதிக்குள் முடிவடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஆண்டு மத்தியில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயோ கழிவறை அமைக்கப்பட்டுவிடும் என்பது தெரிய வந்துள்ளது.