வார்சா: கொரோனா பாதிப்பால், போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.

சீனாவில் மையம் கொண்டிருந்த கொரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளுக்கும் வெகு வேகமாக பரவி வருகிறது.  உலகளவில் 1 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவுக்கு வெளியே, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 202ல் இருந்து 686 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

சீனாவை தவிர்த்து 104 நாடுகளில் 28, 673 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதாகவும் அறிவித்தது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், பாலர் பள்ளிகள், திரை அரங்குகள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள், அனைத்து பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கூட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.