சிட்னி: காலி மைதானத்தில் உலகக்கோப்பை டி-20 தொடர் நடத்தப்படுவதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை அந்நாட்டின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த 2020ம் ஆண்டு, அந்நாட்டில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி-20 தொடரை காலி மைதானத்தில் நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளார் ஆலன் பார்டர். அவர் கூறியுள்ளதாவது, “காலி மைதானத்தில் உலகக்கோப்ப‍ை டி-20 தொடரை நடத்துவது தொடர்பாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இது பொருத்தமாக இருக்காது. ரசிர்களுக்கு மைதானத்தில் இடமில்லை என்றால், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதே தேவையில்லை. கிரிக்கெட் என்பது அனைவரும் இணைந்ததுதான். எனவே, ரசிகர்கள் இல்லையென்றால் எப்படி?” என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் ஆலன் பார்டர்.