நோக்கியாவின் விளம்பர தூதராகும் பிரபல நடிகை ஆலியா பட்

மும்பை

புகழ் பெற்ற நோக்கியா நிறுவன விளம்பர தூதராக பிரபல நடிகை ஆலியா பட் நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரபல இந்திப்பட இயக்குனர் மகேஷ் பட் மற்றும் சோனி ராஸ்தான் ஆகிய தம்பதிகளின் மகளான ஆலியா பட் இந்தி திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1993 ஆம் ஆண்டு பிறந்த இவர் குழந்தை நட்சத்திரமாக 1999 ஆம் வருடம் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல இந்திப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.

இவர் நடித்த ஸ்டூடெண்ட் ஆஃப் தி இயர் என்னும் படத்தின் மூலம் இவர் மிகவும் புகழ் பெற்றார். பல விருதுகளும் இவர் பெற்றுள்ளார். புகழ்பெற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இவரை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

நோக்கியா நிறுவன துணை தலைவர் அஜய் மேத்தா, ”நோக்கியா நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள் வெளியிட உள்ளது. இந்த புதிய மாடல்களை விளம்பரப்படுத்த ஆலியா பட் மிகவும் உதவியாக இருப்பார் என்பதால் அவரை விளம்பர தூதராக தேர்ந்து எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ள்ளார்.