ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜ, பிடிபி கட்சிகள் கூட்டணி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. வன்முறை, ராணுவ அதிகரிப்பு, நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு போன்ற காரணங்களை கூறி இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சுமத்தி பேசி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் வன்முறையை மோதல் அரசியல் என்று பிடிபி பாஜவையும், திருப்திபடுத்தும் அரசியல் என்று பிடிபி.யை பாஜவும் விமர்சனம் செய்து வருகின்றன.

கல்வீச்சில் ஈடுபடுவோர் மீத கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபாவை பாஜ வலியுறுத்துகிறது. ஆனால், கடந்த 2008-14ம் ஆண்டில் தேசிய மாநாட்டு கட்சி முதல்வர் உமர் அப்துல்லா அரசியல் அழுத்தம் காரணமாக போராட்டக்கார்களுடன் எப்படி பணிந்து சென்றாரோ அதேபோன்ற நிலைப்பாட்டை தான் பிடிபி அரசும் எடுக்கிறது என்று பாஜ குறை கூறுகிறது.

மேல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக ஒட்டுமொத்த பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது என்று போலீஸ் மற்றும் பாதுகாப்பு முகமைகள் புகார் தெரிவித்துள்ளன. கல்வீச்சில் ஈடுபடுவோரை கைது செய்தால் பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சியினரிடம் இருந்து அதிக அளவில் அழுத்தம் வருகிறது. இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதில் இரு கட்சியினரும் தான் ஈடுபடுகின்றனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2016ம் ஆண்டில் தான் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து, பிரிவினைவாத வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டது.

2015ம் ஆண்டில் 1,157 வன்முறை வழக்குகளும், 2016ம் ஆண்டில் 3, 404 வன்முறை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் 267 பிரிவினைவாத வழக்குகளும், 2015ம் ஆண்டில் 147 பிரிவினைவாத வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் வடக்கு காஷ்மீரில் 1,248 கல்வீச்சு சம்பவங்களும், தெற்கு காஷ்மீரில் 875 கல்வீச்சு சம்பவங்களும், மத்திய காஷ்மீரில் 567 சம்பவங்களும் என மொத்தம் 2,690 கல்வீச்சு சம்பவங்கள் நட ந்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த பிறகு பிடிபி பிரிவினைவாதிகளுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. பாதுகாப்பு அம்சங்கம் மீது கவனம் செலுத்தாததால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீது பாஜ.வுடனான கூட்டணிக்கு கடுமையான முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டார். காஷ்மீர் மக்களுக்கும், இதர இந்தியாவுக்கும் இடையேயான கூட்டணி என்று அவர் பாஜ கூட்டணியை வர்னணை செய்தார். நாட்டு மக்கள் மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வ ந்ததுபோல், காஷ்மீர் மக்களுக்கு பாஜக.வை நெருக்கமாக கொண்ட வர 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் உதவியாக இருந்தது.

ஆனால் ‘‘இந்த கூட்டணி இணக்கமற்ற கூட்டணி, பகைமை உணர்வு கொண்ட கூட்டணி என்ற விமர்சனம் எழுந்தது. இந்து தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ்.ன் அரசியல் சக்தியாக உள்ள பாஜவுடன் கூட்டணி அமைத்தது பொருத்தமற்றது’’ என்று பிடிபி மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

அமைதியற்ற காஷ்மீரில் பிடிபி.யின் பண்பாடு போன்ற காரணங்களால் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானுக்கு எதிராக பாஜக.வின் அரசியல் முடிவுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வீச்சில் ஈடுப டுவோரை தோட்டாக்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்று பாஜ அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கருத்தை பாஜ ஏற்கவில்லை. அதனால் இந்த கருத்தை அமைச்சர் திரும்ப பெற்றார். கல்வீச்சு கும்பலிடம் இருந்து வீரர்களை காப்பாற்ற ராணுவ வாகனத்தின் முன் ஒரு பிரிவினைவாதியை கட்டி வைத்து ராணுவத்தினர் ஈடுபட்ட சம்பவத்தை பாஜ பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆதரித்துள்ளார்.

‘‘காஷ்மீரில் பாஜக.வுடனான கூட்டணியை பாதுகாக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மாட்டு இறைச்சி விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்துத்வா மற்றும் இந்தி திணிப்பு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கும்’’ என்று பிடிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

இரு கட்சியினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது. இ ந்நிலையில் மாநில நிதியமைச்சர் ஹசீப் திரபு, பாஜ பொதுச் செயலாளர் ராம் மாதவை ஜம்முவில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இங்கு ஆளுனர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. கடந்த 27 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு க்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களது வீட்டிற்கு செல்லக்கூடாது என்று காவல் துறை உத்தரவிட்டிருப்பதை உமர் அப்துல்லா சுட்டிகாட்டியுள்ளார்.

பாஜக.வும் பிடிபியும் இணைந்து ராணுவத்தின் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலத்தை 1990க்கு தள்ளி சென்றுவிட்டன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.ஏ.மிர் தெரிவித்துள்ளார்.