என்னை பதவி நீக்கம் செய்து பார் : யோகிக்கு கூட்டணி அமைச்சர் சவால்

க்னோ

பி முதல்வர் யோகி தம்மை பதவி நீக்கம் செய்து பார்க்குமாறு கூட்டணி அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.   இவர் உத்திரப் பிர்தேச மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.    உ பி சட்டப்பேரவையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இந்த கட்சி உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கும் முதல்வர் யோகி ஆதித்ய நாத் துக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது.   இதே சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு கட்சியான அப்னா தள் கட்சிக்கு யோகி முக்கியத்துவம் கொடுப்பதாக ராஜ்பர் கருதி வருகிறார்.

பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனில் ராஜ்பர் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகலாம் என சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.   இதனால் கோபமடைந்த ஓம் பிரகாஷ் ராஜ்பர் யோகிக்கு ஒரு பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.   இது அரசியல் உலகை பரபரப்பாக்கி உள்ளது.

ராஜ்பர், “யோகி ஆதித்ய நாத் என்னை அமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொல்கிறார்.   முடிந்தால் அவர் என்னை பதவியில் இருந்து விலக்கிப் பார்க்கட்டும்.   நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல.   என் சமுதாய மக்கள் நலனுக்காக நான் பதவி பறி போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.   என்னை பதவியில் இருந்து விலக்கினால் நான் 80 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.” என சவால் விட்டுள்ளார்.