பாஜகவுடன் கூட்டணி? ஓ.பி.எஸ். தரப்பு தகவல்

டில்லி,

நேற்று முன்தினம் இரவு திடீரென டில்லி சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தேர்தல் கமிஷனில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தார்.

பின்னர் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பிறகு அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி அலுவலக டிவிட்டர் பக்கத்தில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததையும் இதனுடன் ஒப்பிடுகின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.