திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி :  திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி:

திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் பேசிய வைகோ,தற்போதைய நிலையில் திராவிட இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இது தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள அறைகூவல்.

நான் திமுக கூட்டணியில் தான் உள்ளேன் என்பதை ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருக்கிறேன்” என்றார்.