பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

அலங்காநல்லூர் மக்கள் கூடி, வரும் பிப்ரவரி 1ம்தேதி இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளனர். இவர்களது கூட்டம் தற்போது நடந்தது. ஏற்கெனவே ஜல்லிக்கட்டை நடத்திய விழா கமிட்டியினர் தான் இவர்ள்.

அவர்கள், “வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவோம். எங்களு்ககு ஆதரவு அளித்த வெளியூர் இளைஞர்களுக்கு தனியான கேலரி அமைத்து மரியாதை செய்வோம்”என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், வெளியூரில் இருந்து வந்து அலங்காநல்லூரில் போராடும் இளைஞர்கள் தனியாக போராட்டத்தைத் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.