சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்!: நடிகர் சிவக்குமார் குரலைக் கேளுங்கள். (ஆடியோ)

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் பேசியுள்ள ஆடியோவில், “வங்கிக்கு சென்றால் அங்கே பெண் தான் இருக்கிறாள், ரயில் நிலையத்துக்கு சென்றால் அங்கே பெண்தான் இருக்கிறாள் எந்த அரசு, தனியார் நிறுவனங்களிலும் பெண்களை பணியமர்த்துவதைத்தான் நிர்வாகத்தினர் விரும்புகின்றனர். பெண் விமானத்தை ஒட்டுகிறாள், ராக்கெட்டிலும் பயணம் செய்கிறாள். ராணுவத்தில் சேர்ந்து எல்லையை பாதுகாக்கும் பணிக்கும்   அவள் வந்துவிட்டாள். ஆனால் அவள் சபரிமலைக்குள்  மட்டும் நுழைய ஏன் தடை விதிக்க வேண்டும்.

பெண்கள் சிரமப்படாமல், கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் சபரிமலை செல்ல  ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது இதை செய்யாவிட்டாலும் எதிர்காலத்தில் இது நடக்கும்” என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்

அந்த ஆடியோ: