பவன் கல்யாணுக்கு அரசியல் ஆதரவு தெரிவிக்கும் அல்லு அர்ஜுன்…!

ஆந்திர மாநிலத்தில் 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது..

தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வரும் இந்நிலையில், ஜன சேனா கட்சி சார்பாக நடிகர் பவன் கல்யாண், காஜீவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் பவன் கல்யாண் மற்றும் நாகேந்திர பாபுவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துக் கொள்ள முடியாவிட்டாலும், எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என்று வெளியிட்டுள்ளார்.