அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’.
இந்தப் படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன.
சில தினங்களுக்கு முன்னால், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களையும் சேர்த்து 1 பில்லியனுக்கும் (100 கோடிக்கும்) அதிகமான முறை கேட்கப்பட்டு சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.


தற்போது யூடியூப் பக்கத்தில் ‘அலா வைகுந்தபுரம்லோ’ பாடல்கள் இசை வடிவம் மற்றும் வீடியோ வடிவம் என அனைத்தும் சேர்த்தும் 100 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.