ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடெல்லி:
ந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், இந்தியாவில் 3, 05,613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,46,726 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தம் 1,50,161 மொத்தம் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா காரணமாக 8,711 பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 1,01,141 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 51,346 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இந்தியா 4ம் இடத்திற்கு சென்றுள்ளது, இதற்கு மக்கள் தொகையே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் நாம் தற்போதும் குறைந்த அளவிலான பாதிப்பையே சந்தித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி