பதவி விலகினார் அலோக் வர்மா! மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு

டில்லி:

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மத்திய அரசு நேற்று விடுவித்தது.  அதைத்தொடர்ந்து அவருக்கு  மத்திய அரசு வழங்கிய தீயணைப் புத்துறை இயக்குனர் பதவியை வழங்கியது.

இதை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனதுபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ரஃபேல் ஊழல் தொடர்பான  புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க முனைந்த நிலையில், அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும்  இடையே நடைபெற்று வந்த பனிப்போரை காரணம் காட்டி மத்திய அரசு இருவரையும் கட்டாய ஓய்வில் அனுப்பியது.

இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய அலோக் வர்மா உச்சநீதி மன்றத்தை நாடினார். உச்சநீதி மன்றம், மத்தியஅரசின் உத்தரவை ரத்து செய்து, அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக தொடர அனுமதி வழங்கியது. அத்துடன் ஒரு நிபந்தயும் விதித்தது.

அலோக் வர்மா குறித்து சிபிஐ இயக்குனர் தேர்வு கமிட்டி கூடி முடிவு எடுக்கவும் அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து அவசரமாக கூடிய மோடி தலைமை யிலான  சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து தூக்கி விட்டு, தீயணைப்பு துறை இயக்குனராக மாற்றியது.

இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சரமாரியாக குற்றம் சாட்டியவர், சிபிஐ போன்ற உயர்ந்த அமைப்புகளின் சுதந்திர தன்மை பாதிக்ககூடாது என்றவர், இதுபோன்ற அமைப்புகளில்  வெளி நபர்  தலையீடு இருக்கக்கூடாது என்றும், ஆனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது என்றும் கூறினார்.

நேற்று  நடை பெற்ற செயல்கள்  எனது செயல்பாட்டை பிரதிபலிப்பதாக இல்லை, என்றும் குற்றம் சாட்டினார். எனது நேர்மை மத்திய ஆட்சியாளர்களார் புறந்தள்ளப்பட்டதாக குமுறிய அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினா குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கும் (MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS) கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல  என்றவர்,இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு அலோக் வர்மா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.