மனநோயாளியா?: ஜூலி கதறல்! # பிக்பாஸ் அலப்பறை

ன்றைய பிக்பாஸ் எபிசோடில், “நான் மனநோயாளியா” என்று ஜூலி கதறும் உச்சகட்ட காட்சி அரங்கேறியது.

சில நாட்களுக்கு முன், பிக்பாஸ் குடும்பத்தினரை சந்திக்க தமிழ் தலைவாஸ் கபடி  அணியினர் வந்தார்கள். அன்று திடுமென கீழே தவறி விழுந்துவிட்டார் ஜூலி. இதனால் வயிற்றில் கடும் வலி என துடித்தார்.

சிநேகன் உள்ளிட்ட ஆண்கள் ஜூலியை தூக்க படுக்கையில் படுக்கவைத்து, ஆறுதல் கூறினார்கள். அந்த நேரத்தில் காயத்ரி, “ஜூலி நடிக்கிறா” என்றார்.

இதை ஓவியாவிடம் சொல்லி அழுதார் ஜூலி. ஓவியாவும், ஜூலிக்கு ஆறுதல் கூறினார்.

இன்று இது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல், போட்டியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜூலி, “ அன்று நடிக்கிறா என்று மற்றவர்கள் என்னைச் சொல்வதாக நினைத்து அழுதேன். ஆனால் ஓவியாவை சொல்லியிருக்கிறார்கள். இதை எனக்கு ஓவியா தெளிவுபடுத்தவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

உடனே, அன்று நடந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் ஓவியா உண்மையாகவே ஜூலிக்கு ஆறுதல்தான் கூறியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஆனாலும் ஓவியாதான் தன்னை பிறருக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது போல ஜூலி சொல்லிக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து கமல், “சிலருக்கு தான் கூறிய பொய், அப்படியே நடந்ததாகத் தோன்றும். சில சமயங்களில் இப்படி ஏற்படலாம். இது எல்லோருக்கும் இருக்கும் குணம். இது ஒருவகை மனநிலை” என்றார்.

சிநேகன், கணேஷ் உள்ளிட்டவர்களும், ஜூலி பொய் சொல்வதாகக் கூறினர்.

அதன் பிறகு, ஜூலி கதறி அழ ஆரம்பித்தார். “நான் பொய் சொல்கிறேனா..பொய்யை உண்மை என நினைத்துக்கொள்கிறேனா.. அப்படியானால் நான் மெண்டலா” என்றெல்லாம் கேட்டு கதறினார்.

அவரை சிநேகன் உள்ளிட்டோர் சமாதானப்டுத்தினார்கள்.

ஆக, இன்றைய உச்சகட்ட காட்சி, ஜூலியின் கதறல் என்பதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.