Random image

நான் செயல்படாத தலைவரா?:  ஸ்டாலின் ஆவேசம்

நான் செயல்படாத தலைவரா? என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா, தஞ்சாவூரில் நேற்று நடந்தது. இதில்,  தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“முதல்வர் பழனிசாமி, என்னை, செயல்படாத தலைவர் என விமர்சனம் செய்திருக்கிறார்.  நான் செயல்படாத தலைவராகவே இருந்து விட்டு போகிறேன். ஆனால், உங்களை போல், எடுபிடி முதல்வராக இருக்க மாட்டேன்.

 

 

 

மத்திய அரசுக்கு அடிமையாகி, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.

நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில், எல்லாருக்கும் ஒத்த கருத்து உண்டு. எட்டு வழிச்சாலை திட்டத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தால், உங்களுடன் சேர்ந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகிறேன்.

டி.ஆர்.பாலு, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, லஞ்சம் வாங்கியதாக முதல்வர் பேசுகிறார்.  இது உண்மை என்றால், முதல்வருக்கு தைரியம் இருந்தால், டி.ஆர்.பாலு மீது வழக்கு தொடரட்டும். அதை சந்திக்க, தயாராக உள்ளோம்” என்று ஸ்டாலின் பேசினார்.

You may have missed