நானா படோகரா.. தனுஸ்ரீயா?: அமிதாப் ஆத்திரம்

நானா படேகர் மற்றும் தனுஸ்ரீ தொடர்பான கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆத்திரத்துடன் எதிர்வினையாற்றினார்.

2005ம் வருடம் வெளியான ஆசிக் பனாயா ஆப்னே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் நடிகர் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் நானா படேகர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். பத்து வருடங்களுக்கு முன் “ஹார்ன் ஒகே ப்ளீஸ்” என்ற படத்தின் படப்பிடிப்பின்போது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று தெரிவித்தார்.

நானா படேகர் அண்மையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். திரைத்துறையில் தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது என பல விருதுகளைப் பெற்றவர்.  சமூகசேவை செய்வதில் அக்கறை செலுத்துபவர்.

அவரைப் பற்றி தனுஸ்ரீ தத்தா மேலும் தெரிவித்ததாவது: “நானா படேகர் யார் ? அவரது பின்னணி  என்ன ? அவர் எத்தைனை பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்  என்பது திரைத்துறையினருக்கும் தெரியும்.  ஆனால் இதுகுறித்து ஊடங்களில் எந்த செய்திகளும் வெளியிடப்படுவதில்லை!”

தனுஸ்ரீ இப்படி பேட்டி அளித்ததும். அவர் நடித்த கவர்ச்சிக் காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.  அதற்கு தனுஸ்ரீ, “திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்ததால், உண்மையிலேயே அதேபோல் தான் இருப்பேன் என்ற முன்முடிவுக்கு வருவது ஏன்?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் நானா படேகர், “தனுஸ்ரீ கூறும் குறிப்பிட்ட படத்தின் படப்பிடிப்பில் இரு நூறு பேருக்கு மேல் இருந்தனர். அவர் கூறுவது பொய் என்று அனைவருக்கும் தெரியும்” என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் ஆத்திரமான அவர், “எனது பெயர் நானா படேகரும் இல்லை. தனுஸ்ரீயும் இல்லை. பிறகு இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

 

கார்ட்டூன் கேலரி