30 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அமலா…..!

--

டி ராஜேந்தரின் ‘மைதிலி என்னை காதலி ‘ படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா.

சில படங்களிலேயே தமிழின் முன்னணி நடிகையான அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

அதையடுத்து அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.

இந்நிலையில் தற்போது 29 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் சர்வானந்த் மற்றும் ரீத்து வர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

டிரீம் வாரியஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு இப்படத்தை தயாரிக்க உள்ளார்.