ஆண் நண்பருடன் பீச்சில் ஆட்டம் போட்ட அமலாபால். குரங்கு சேட்டை  எனது குணம்..

பிரபல நடிகை அமலாபால் கொரோனா ஊரடங்கிற்கு ஷூட்டிங். திருமண சர்ச்சை, விபத்தில் சிக்கு காலில் காயம் என தினம் தினம் ஒரு பரபரபை காட்டி அந்தார். கொரோனா ஊரடங்கு பிறப்பித்த பிறகு அவரது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குள் முடங்கி இருந்தார். யோகா, உடற்பயற்சி என்று நேரத்தை செலவழித்து வந்தார்.


எத்தனை மாதம்தான் முடங்கி இருப்பது என்று தனது ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு நேற்று பீச்சுக்கு சென்றார். பீச்சில் அமலா பால் மணலில் அமர்ந்து சன்பாத் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் மீது ஆண் நண்பர் ஒருவர் மணலை அள்ளி எடுத்து வந்து தூவ உடனே வேகமாக எழுத்து அவரை விரட்டிச் சென்றார் அமலா. கடல் அலையில் இருவரும் சேட்டைகள் செய்து ஒருவரையொருவர் அலையில் தள்ளினர். சுதந்திரமாக அமலாபால் போட்ட இந்த ஆட்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வாகவும் வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி அமலா பால் கூறும்போது, ’லாக் டவுன் தொடங்கியதிலிருந்து முதன் முறை யாக நான் கற்றுக்கொண்ட பாடம் சுதந்தி ரத்தின் முக்கியத்துவத்தைத்தான். சுதந்திர மாக நடமாடுவது மிக முக்கியம். சுதந்தி ரம்தான் எனக்கு எல்லாமும். எனக்கு பிடித் தவர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட சிறந்த சந்தோஷம், அவர்களுடன் நான் செய்யும் எனது குரங்கு சேட்டைகள் தான் எனக்கு மகிழ்ச்சி’ என்றார்.

அமலாபால் அதோ அந்த பறவை போல உள்ளிட்ட 4 படங்களில் நடித்துவருகிறார். ஊரடங்குக்கு பிறகு ஷூட்டிங் தொடங்கி யவுடன் பறவை போல பறந்துவிடுவா ராம்.