“நான் இப்போது காதல் உறவில் உள்ளேன்” வெளிப்படையாக போட்டுடைத்த அமலா பால் …!

ரத்னகுமார் இயக்கத்தில் ஜூலை 19 அன்று அமலா பால் நடிப்பில் வெளியாகும் படம் ஆடை . தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது இப்படம்.

இந்நிலையில் ஃபிலிம்கம்பேனியன் செளத் இணையத்தளத்துக்குப் பேட்டியளித்த அமலா பால் , நான் இப்போது காதல் உறவில் உள்ளேன். ஆடை கதையைக் கேட்டபோது அவர் என்னிடம் முதலில் சொன்னது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் 100 சதவிகிதம் தயாராகவேண்டும் என்று கூறினார்.

நான் தற்போது மாறியதற்கும் என் வேலை குறித்த பார்வைக்கும் அவரே காரணம். தன்னுடைய வேலையை எனக்காக விட்டுவிட்டார். சினிமா மீதான என்னுடைய ஆர்வத்தை அவர் அறிவார். என் படங்களைப் பார்த்துவிட்டு, நான் ஒரு மோசமான நடிகை என்று குறிப்பிட்டார். என்னுடைய மூன்றாம் கண்ணைத் திறந்தவர் அவர்தான்.

என் வாழ்வில் வந்து, என் குறைகளைக் கிழித்தெடுத்தார். என் வாழ்வின் உண்மை அவர்தான் என்று கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி