முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி….!

2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்.

இந்த சூழலில் திருமணப் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு அமலா பாலுடன் உள்ள புகைப்படங்களை மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங், மார்ச் 20 அன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அடுத்த நொடியே அந்தப் புகைப்படங்களை நீக்கியும்விட்டார் .

இந்நிலையில் நடிகை அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் பவ்னிந்தர் சிங் தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் , மேலும் அவர் மீது உரிமையியல் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.