தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால் .

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அமலா பாலிற்கும் காதல் மலர்ந்து மணமுடித்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் விட்டனர் .ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது.

தற்போது இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பாடகர் பவ்னிந்தர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.