எளிமையாக நடந்த இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்….!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் விஜய் அமலா பாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்து விட்டார்.

அதன்பின் இயக்குநர் விஜயை நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசு எழுந்த வண்ணம் இருந்தது. இதனாலேயே இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்ய அவர் பெற்றோர் முடிவு செய்தனர்.

சென்னையை சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவருடன் விஜய்க்கு திருமணம் ஏற்பாடு செய்தனர். இது குறித்து விஜயும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் இன்று சென்னையில் மிக எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் இரு வீட்டாரின் உறவினர்களும், சில முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி