இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் சர்வானந்த். நீண்ட வருடங்கள் கழித்து நடிக்க விருக்கும் புதிய படத்தில் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

மேலும் ரீத்து வர்மா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளராக சுஜித் சாரங், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.