‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா….!

 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக்காவது குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது .

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வசனம் எழுதி மெர்லபகா காந்தி (Merlapaka Gandhi) இயக்குகிறார். மஹட்டி ஸ்வர சாகர் இந்த படத்துக்கு இசையமைக்க, ஹரி கே வேதாந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாராம்.

நிதின் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கிறார்களாம்.