மத்தியஅரசு நிதி ஒதுக்க மறுப்பு: நிதி திரட்ட பங்குசந்தையில் இறங்கியது ஆந்திர அரசு

சென்னை:

ந்திராவின் புதிய தலைநகரை கட்டமைக்க ரூ.2000 கோடி நிதி தேவைப்படும் நிலையில், நிதி திரட்ட பங்குவர்த்தகத்தில் இறங்கி உள்ளது ஆந்திர அரசு.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும், ஆந்திர மாநிலத் தின் புதிய தலைநகரை கட்டமைக்க நிதி ஒதுக்கக்கோரியும் ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாடு மத்தியஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

ஆனால், ஆந்திராவின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருவதால், பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற நாயுடு, நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்,  ஆந்திரத் தலைநகர் அமராவதியைக் கட்டமைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக அமராவதி பத்திரம் வெளியிடப்பட்டது. இந்த பத்திரம்  இன்று  மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இதன்படி,  அமராவதியை புதிய தலைநகராக அனைத்து வசதிகளுடன் கட்ட மைக்க தேவையான  2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்ட சந்திர பாபு நாயுடு அரசு, ஆண்டுக்கு 10.3 சதவிகிதம் வட்டிவிகிதத்துடன் கூடிய அமராவதி பத்திரம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பத்திரத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அமராவதி பத்திரத்தை பங்கு வர்த்தகத்தில் பட்டியலிட்டார்.