பஞ்சாப்:
யில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய மசோதாவை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு தனது அரசின் முழு ஆதரவும் உள்ளது என்று மீண்டும் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அரசு மற்றும் பஞ்சாப் மாநில மக்களின் நலன்களை கருதி, ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்தி சரக்கு ரயில்கள் கடந்து செல்ல அனுமதிக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசின் விவசாய மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது என்று, அதனை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது:

அரசு தனது முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், விவசாயிகள் உட்பட குடிமக்களும் எந்த ஒரு சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யவும், ரயில் மறியல் போராட்டத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சரக்கு ரயில்களை முற்றுகையிட்டுள்ளதால், பஞ்சாபில் உள்ள நிலக்கர் ஆலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவர்களிடம் இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளது என்றும், ஒருவேளை நிலக்கரிகள் தீர்ந்து விட்டால் அது மாநிலத்தின் மின்சார விநியோகத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், இதனால் குடிமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்க படுவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தருகிறது, ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டுகிறேன் என்று விவசாயிகளிடம் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.