ஒரு வீரருக்கு தலா 3 எதிரிகளை பலிகேட்கும் பஞ்சாப் முதல்வர்!

சண்டிகர்: கொல்லப்பட்ட இந்திய வீரர் ஒவ்வொருவருக்கும் பதிலாக, 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்.

லடாக்கின் கல்வான் பகுதியில், இந்தியா – சீனா இடையிலான ராணுவ மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடெங்கிலும் சீனாவுக்கு எதிரான கடும் ஆவேசத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு இந்திய வீரரின் வீரமரணத்திற்கும் பதிலடியாக 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும். நான் அரசியல்வாதியாக பேசவில்லை. நானும் ராணுவத்தில் இருந்தவன்.

ராணுவத்தினர் மீது அன்பு கொண்டவன் என்ற விதத்தில் நம் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இந்தக் கொடூரமான சீன தாக்குதலுக்கு மத்திய அரசிடமிருந்து தக்க பதிலடியை ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது” என்றுள்ளார் அவர்.