ம்மு

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்க தரிசன யாத்திரை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் குகைக் கோயில் உள்ளது.   அங்கு தானே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர்.    கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாத்ம் அமர்நாத்த் யாத்திரிகர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.  சுமார் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.    நாடே இந்த தாக்குதலால் பரபரப்பு அடைந்தது.    சென்ற ஆண்டு முதல் இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.  நேற்று கவர்னர் சத்யபால் தலைமையில் அமர்நாத் யாத்திரை குரித்து ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவின் படி இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் தொடங்குகிறது.   சுமார் 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 15 உடன் நிறைவு பெறுகிறது.  இந்த யாத்திரையில் 13 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவை www.Shriamarnathjishrine.com என்னும் தளத்தில் பக்தர்கள் பதிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.