Random image

கனமழை : அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ம்மு

காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் பனி லிங்கம் உருவாகும்.   அதை தரிசிக்க லட்சக்கணக்கானோர் யாத்திரை செய்வது வழக்கம்.   இந்த ஆண்டுக்கான யாத்திரை தற்போது நடைபெறுகிறது.   இந்த யாத்திரை அடுத்த மாதம் 20 அம் தேதி நிறைவு பெருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் இப்போது கனமழை பெய்து வருகிறது.   இதனால் யாத்திரை செல்ல முடியாத நிலையில் பக்தர்கள் உள்ளனர்.   அதை ஒட்டி உதம்பூர் பகுதியில் 2000 பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   அத்துடன் பகவதி நகர் முகாமில் இருந்து கோவிலுக்கு செல்பவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர்.

அத்துடன் பகல்காம் நோக்கிச் சென்ற பாதுகாபுப் படை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.   மேலும் ஜம்முவில் உள்ள முகாமில் உள்ளவர்களும் மேற்கொண்டு யாத்திரை மேற்கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.