Random image

பனி லிங்கத்தை 11 நாளில் 1.4 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீநகர் :

-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை பனி லிங்க தரிசனம் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் கவர்னரும், அமர்நாத் புனித யாத்திரை அமைப்பின் தலைவருமான என்.என்.வோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் அமைப்பின் செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இன்று மட்டும் 9 ஆயிரத்து 606 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். 11 நாட்களில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 18 பக்தர்கள் தரிசித்துள்ளனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது, நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை சீற்றங்களை கையாளுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’’ என்றார்.

ஆகஸ்ட் 26ம் தேதியோடு அமர்நாத் யாத்திரை நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.