ஸ்ரீநகர்:

ந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 28ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  ஹெலிகாப்டர் மூலம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிபுவு நாளை தொடங்குகிறது.

தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு இமயமலையில் உருவாகும் பனி லிங்கத்தை காணுவதற்கான யாத்திரை  ஜூன் 28-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில் நடக்க இயலாதவர்கள், ஹெலிகாப்டர் மூலம் யாத்திரை மேற்கொள்ளும் வகையில் அதற்கான சேவையும் நடைபெற்றுகிறது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

சுமார் 60 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரையை மேற்கொள்ள ஒரு நாளைக்கு 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான முன்பதிவுகள், நாடுமுழுவதிலும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஜம்மு-காஷ்மீர் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் நடைபெற்று வருகிறது.

மேலும் ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்வதற்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை -ஏப்.27) தொடங்குகிறது.

இவை தவிர ஜம்முவில் உள்ள வைஷ்ணவி கோவில், சரஸ்வதி கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் யாத்திரை நடைபெறும் காலத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அமர்நாத் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.