பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியது….

ஸ்ரீநகர்:

லத்த பாதுகாப்புடன் காஷ்மீரில் இன்று அமர்நாத் யாத்திதை தொடங்கி உள்ளது. இன்று முதல் குழு காஷ்மீரில் இருந்த அமர்நாத் குகையில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசரிக்க புறப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள  அமர்நாத் குகைக்கோயிலில் வருடம்தோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஷ்மீர் வழியாக செல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் அமர்யாத் யாத்திரைக்கு  2.11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 40 நாள் அமர்நாத் குகை யாத்ரீகர்களுக்காக திறந்திருக்கும் நிலையில், இன்றுமுதல் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது.

இன்று யாத்திரை தொடங்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  அந்த பகுதிக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து சுமார் 40 ஆயிரம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. யாத்ரீகர்கள் செல்லும் வாகனம்  காஷ்மீர் மாநிலம், பகவதி நகரில் உள்ள பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து புறப்பட்டு சென்றது.

காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து யாத்திரையை  தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி உள்ள  அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம்  26-ம் தேதி நிறைவடைகிறது.