ஸ்ரீநகர் :

மர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. பொதுவாக 48 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி (ரக்சா பந்தன்) அன்று நிறைவு பெறுகிறது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக, போலீஸ், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 40,000பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள  அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான யாத்திரை இன்று தொடங்கியது.  யாத்திரைக்கான முதல் குழு, ஜம்முவின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

பக்தர்கள் பக்தி கோஷமுடன் புறப்பட்டு சென்றனர்.