Random image

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தால் பயனில்லை : பொருளாதார நிபுணர்

டில்லி

பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால் ஒருவருக்கு ரூ.20 மட்டுமே பெற முடியும் என பொருளாதார நிபுணர் அமர்த்திய சென் தெரிவித்துள்ளார்.

நேற்று டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் பிரபல பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியா பொருளாதாரத்தில் தவறான பாதையில் செல்வதாக வருத்தம் தெரிவித்தார்.  மேலும் அவர் பாஜக அரசை தனது உரையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அமர்த்தியா சென் தனது உரையில்,  “இந்து என்னும் அடையாளத்தை காட்டி அந்தக் காலத்தில் இந்தியா சுதந்திரம்  அடைந்தது.   ஆனால் தற்போது அதே அடையாளத்தை காட்டி பாஜக அரசு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது.    அது மட்டுமின்றி இன்னும் இந்து மதத்தை சேர்ந்த தலித் மக்கள் கழிவுகளை அகற்றுபவர்களாகவே உள்ளனர்.   ஆனால் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி ‘ஆயுஷ்மான் பாரத்’ என்னும் ஒரு உடல்நலக் காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளார்.    அது குறித்து அரசு தரப்பில் பெரிதும் விளம்பரப்படுத்தப் படுகிறது.   உண்மையில் அந்த திட்டத்துக்கு  வெறும் ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.   நமது நாட்டில் 100 கோடி மக்கள் உள்ளனர்.   அதாவது ஒருவருக்கு ரூ.20 தான் செலவு செய்ய முடியும்.” என தெரிவித்துள்ளார்.