அமேசான் : அதிகப் பளுவால் கிறிஸ்துமஸ் தினத்தன்று குரல் கட்டுப்பாட்டு சேவை முடக்கம்

வாஷிங்டன்

மேசான் நிறுவனத்தின் குரல் கட்டுப்பாட்டு சேவையான அலெக்ஸா அதிகப் பளுவால் கிறிஸ்துமஸ் தினத்தன்று முடங்கிப் போனது

.

அமேசான் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை கட்டுப்படுத்த அலெக்ஸா என்னும் குரல் கட்டுப்பாட்டு சேவை சாதனத்தை அறிமுகம் செய்தது. அதன் மூலம் பாடல்களை அல்லது தங்கள் வீட்டில் உள்ள பல பொருட்களை வாடிக்கையாளர்கள் செயல்படுத்தி வந்தனர். இந்த அலெக்ஸா மூலம் தேவையான பாடல்களை தேர்ந்தெடுத்தால் அதை ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் கேட்டு மகிழலாம்.

அத்துடன் விளக்குகளை ஏற்ற, மின்சார சமையலறை சாதனங்களயும் இதன் மூலம் செயல்பட வைக்கலாம். கிட்டத்தட்ட ஒரு ரிமோட் போல வீட்டில் உள்ள பல பொருட்களை இணையம் மூலம் இந்த சாதனத்தைக் கொண்டு செயல் படுத்தலாம் அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் அலெக்ஸா அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.

வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் வாய்மொழி உத்தரவை அமேசான் நிறுவனத்தின் கணினிக்கு அலெக்ஸா அனுப்பி வைக்கிறது. அந்த கணினி அதனுடன் பொருத்தப்பட்டுள்ள மற்ற சாதனங்களுக்கு உத்தரவை அனுப்புகிறது. அதன்மூலம் தேவையான பாடல்கள் ஒலிபரப்பப் படுகிராது. அத்துடன் வானிலை குறித்த அறிவிப்புகள் ஸ்பீக்கர் மூலம் அளிக்கப்படுகிறது. விளக்குகளை அணைப்பது உள்ளிட்ட வேலைகளும் நடைபெறுகிராது.

தற்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த அலெக்ஸா சேவை உபகரணங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் கணினிக்கு அதிகப் பளு ஏற்பட்டுள்ளது. அதை ஒட்டி அலெக்ஸா சாதனங்களால் அனுப்பபட்ட எந்த ஒரு உத்தரவையும் கணினியால் சாதனங்களுக்கு மாற்ற முடியவில்லை. அலெக்ஸா இடம் இருந்து “மன்னிக்கவும். நீங்கள் சொல்வதை என்னால் தற்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை” என தொடர்ந்து பதில் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் அலெக்ஸா உபயோகிப்பாளர்கள் மிகவும் அதிருப்திஅடைந்துள்ளனர். அமேசான் நிறுவனத்துக்கு இது குறித்து புகார்கள் குவிந்தன. அமேசான் நிறுவன அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஆயினும் வாடிக்கையாளர்கள் இந்த சேவை முடங்கியது குறித்து டிவிட்டரில் புகார் அளித்துள்ளனர். அத்துடன் இனி அலெக்ஸா சேவையில் இணைக்கப்படும் சாதனங்கள் பண்டிகைகலில் செயல் படாதா என வினா எழுப்பி உள்ளனர்.