முக்கியமான 7 படங்களின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது அமேசான் நிறுவனம்….!

கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் பணிகளும் நடைபெறவில்லை. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எந்தவொரு திரைப்படமும் வெளியாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது அமேசான் நிறுவனம்.

டிஜிட்டலில் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்பதால், அதற்கான விலையைக் கேட்டனர் தயாரிப்பாளர்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பல படங்களைக் கைப்பற்றியது அமேசான் நிறுவனம்.

இன்று (மே 15) காலை தாங்கள் கைப்பற்றிய படங்களையும், எப்போது அவை வெளியிடப்படும் என்ற தகவலையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி

பொன்மகள் வந்தாள் (தமிழ்) – மே 29

குலாபோ சிதாபோ (இந்தி) – ஜூன் 12

பெண்குயின் (தமிழ்) – ஜூன் 19

லா (Law) (கன்னடம்) – ஜூன் 26

ப்ரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) – ஜூலை 24

சகுந்தலா தேவி (இந்தி) – இன்னும் முடிவாகவில்லை

சுஃபியும் சுஜாதாவும் (Sufiyum Sujatayum) (மலையாளம்) – இன்னும் முடிவாகவில்லை.

You may have missed