தமிழ் சினிமா வரலாற்றை மாற்றிய அமேசான்..

சின்ன சின்ன தமிழ் திரைப்படங்களை விலைக்கு வாங்கி, தியேட்டரில் வெளியாகும் முன்பே தனது ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் செய்த அமேசான், இன்று பெரிய பட்ஜெட் படமான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ரிலீஸ் செய்துள்ளது.
திரையரங்கை காணும் முன்பாக, பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடுப்படுவது, ஒரு புறம் இருக்க அந்த படத்துக்கான விளம்பரமும் பெரிய மாற்றம் தான்.
தினசரி பத்திரிகைகளில், 1980 களில், தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் அன்று முழுப்பக்க விளம்பரம் வெளியாகும்.
ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீசானால், ஐந்து முழுப்பக்க விளம்பரங்கள் ஜொலிக்கும்.
பின்னர் சில காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்படுவதில்லை.
30 ஆண்டுகால, தடைகளை உடைத்து ‘பொன்மகள் வந்தாள்’’ படத்துக்கு அமேசான், பல தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் , அதுவும் முதல் பக்கத்தில் கொடுத்திருப்பது, கோடம்பாக்கத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்