மேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவி வழங்க முன்வந்த நிலையில், நிதி உதவி தேவையில்லை என்று பிரேசில் அதிபர் நிராகரித்து உள்ளார்.

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லாத நிலையி லும், பிரான்ஸ் அதிபர் இம்ரான் மேக்ரோனின் அழைப்பின் பேரில் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ஜி7 உறுப்பு நாடுகள் சார்பில்,  தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக் காக  20 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.160 கோடி) நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அறிவித்தார்.

ஆனால்,  இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச நிதியை நிராகரித்த பிரேசில் அதிபர் போல்சோ னாரோ, தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது அமேசானை காரணமாக வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும்,  பிரேசிலை யாருமற்ற காலனி பிரதேசமாக கருத வேண்டாம் என்று கூறியுள்ள பிரேசில் அதிபர் உலகநாடுகளின் உதவியை நிராகரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி உலக நாடுகள் பிரேசில் அரசுக்கு கடும் நெருக்குதல் கொடுத்து வரும் நிலையில் பிரேசில் அதிபரின் நிதி நிராகரிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.