இரண்டே நாட்களில் ரூ. 1.43 லட்சம் கோடி இழந்த அமேசான் நிறுவனர்

ரண்டே நாட்களில் ரூ. 1.43 கோடியை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் குவித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர்  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் இடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெப் பெசோஸ் இருந்து வருகிறார். இவர் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு ஆரம்பித்தார்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர் ஆகும். இதுவரை முதலிடம் பிடித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.

இந்தநிலையில், ஜெப் பெசோஸூக்கு  இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவன பங்குகள் இரண்டு நாட்களாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. .

இதில் ஜெப்பெசோஸ் நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்தன.  சுமார் 19.2 பில்லியன் டாலர்ககள் அளவுக்கு அவருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 500 பேரின் சொத்து மதிப்புகள் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 99 பில்லியன் டாலர் வரை சரிந்திருப்பதை குறிப்பிட்டுள்ளது.  கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு பெசோஸ் சொத்து மதிப்பு மிக அதிகமான அளவு குறைந்துள்ளது. பெசோஸுக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

பில்கேட்ஸ், மெக்ஸிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு உரிமையாளர் கார்லோஸ் சிலிம் உள்ளிட்டவர்களின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed