நியூயார்க்

மேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தனது மனைவி மாக்கென்ஸிக்கு உலகிலேயே அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு அளித்துள்ளார்.

உலக செல்வந்தர்களில் ஒருவரான 55 வயதாகும் ஜெஃப் பெஸோஸ் அமேசான் நிறுவன அதிபர் ஆவார்.  இவர் மனைவியான 48 வயதாகும் மாக்கென்ஸி ஒரு நாவலாசிரியை ஆவார்.   இவர்கள் இருவரும் கடந்த 1993 ஆம் வருடம் திருமணம் செய்தனர்.    இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 1994 ஆம் வருடம் ஜெஃப் ஆரம்பித்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைந்து தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8900 கோடி டாலராக உள்ளது.   இந்திய மதிப்பில் இது ரூ. 6,17,000   கோடி ஆகும்.

தற்போது இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.  ஜெஃப் விவாகரத்து இழப்பீடாக தனது நிறுவன பங்குகளில் 25% மாக்கென்ஸிக்கு அளித்துள்ளார்.   இதன் மூலம் மாக்கென்ஸி உலகின் மூன்றாம் பணக்கார பெண்மணி ஆகி உள்ளார்.   இவரை விட அதிக செல்வம் உள்ள பெண்மணிகளாக லாஒரேல் நிறுவனத்தின் பேட்டன்கோட் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் அலைஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த பிரிவினைக்கு பிறகும் ஜெஃப் உலக செல்வந்தர்களில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.  அவருக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் மற்றும் ஹாத்வே நிறுவனத்தின் வாரன் பஃபே ஆகியோர் உள்ளனர்.     விவாகரத்து மற்றும் இழப்பீடு குறித்த தகவலகளை இருவரும் தனித்தனியாக அவரவர் டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள்னர்.