இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…

புதுடெல்லி: 
ந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான் தற்போது மதுவை வீட்டிற்கே சென்று விநியோகிக்க உள்ளது. முழு ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து மாநிலத்திற்கு அதிகப்படியான வருமானத்தை கொடுக்கும் டாஸ்மாக் பெரிதும் அடி வாங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடி உள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மது பிரியர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகின்றனர். ஆனாலும் சில மாநிலங்களில் மதுவிற்பனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரிய பெரிய வரிசைகளில் மது பிரியர்கள் நின்று கொண்டுதான் இருக்கின்றனர்.
மது பிரியர்களின் துயரம் விரைவில் தீரப் போகிறது. ஏனென்றால் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தியாவில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் மதுவை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்ய அமேசான் தயாராகிவருகிறது. மதுபானங்களை வினியோகம் செய்ய அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து, மேற்கு வங்க மாநில அரசுடன் அமேசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
மேலும் பிக்பாஸ்கெட் நிறுவனமும் மதுபானங்களை வினியோகம் செய்ய அனுமதி பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே ஸ்விக்கி ஃஜொமேட்டோ நிறுவனங்கள், மதுபானங்களை வினியோகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தியா முழுவதும் மதுபானங்கள் வினியோகிக்கப்படுமாஎன்றால் தற்போது இல்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மதுபான விற்பனையில் தனக்கென சில விதிகள் உள்ளன. அதனால் முதற்கட்டமாக மேற்குவங்கத்தில் அமேசான் துவங்க உள்ள  மதுபான விற்பனை, அங்கு அனைத்தும் சரியாக நடந்தால் மற்ற மாநிலங்களுக்கும் வர வாய்ப்புள்ளது.