ஆப்பிள் போனை விற்க அமேசான் ஒப்பந்தம்

வாஷிங்டன்

ப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்க அமேசான் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபாட், கணினிகள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகிறது. அத்துடன் விடுமுறைக்காலங்களில் தங்கள் பொருட்களை வேறு ஒரு விற்பனை நிறுவனம் மூலம் விற்பதும் வழக்கமாக கொண்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மையாக உள்ள நிறுவனங்களில் அமேசான் நிறுவனமும் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் பல பொருட்களுக்கு அமேசான் ஆதரவு அளிக்காததால் சென்ற வருடம் யூ ட்யூப் சேவையை அமேசான் நிறுவனத்தின் இரு பொருட்களுக்கு கூகுள் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் வீடியோ சேவையை ஆப்பிள் டிவி அங்கீகரித்துள்ளது.

அதை ஒட்டி அமேசான் நிறுவனம் ஆப்பிள் பொருட்களை தனது விடுமுறைக்கால விற்பனையில் இணைக்க ஒப்பந்தம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அமேசான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.

இரு வேறு துருவங்களாக செயல்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனமும் அமேசான் நிறுவனமும் ஒப்பந்தம் இட்டுள்ளது வர்த்தக உலகில் ஒரு மாபெரும் திருப்பம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.