நாட்டில், ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார்.இதற்கு இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்’ என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.மக்களின் பொழுதுபோக்காக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் மாறி வருகின்றன.

தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கில் முக்கியமான தளமான, அமேசான் ப்ரைம் தளம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “அமேசான் ப்ரைமில் நீங்கள் உபயோகிக்கும் நேரத்தில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மொபைல் போனில் இன்டர்நெட் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சில தவிர்க்கமுடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி (சாதாரண குவாலிட்டி)யில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்.

எச்டியோ அல்லது எஸ்டியோ நாங்கள் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்போம். தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளது அமேசான் நிறுவனம். இந்த அறிவிப்பால் இதன் பயனீட்டாளர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.