2019-ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியது.
கொரோனா ஊரடங்கில் மக்கள் உள்ள இந்த சமயத்தில் ‘விஸ்வாசம்’ படம் பற்றிய சுவாரசியங்கள் குறித்து வெளியிட்டுள்ளது அமேசான்


‘விஸ்வாசம்’ படத்தின் தொடக்கத்தில் வரும் சில ட்ரோன் காட்சிகளை அஜித்தே படமாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. அதில் தயாரிப்பாளர்களின் பெயர் வரும் காட்சி அவர் காட்சிப்படுத்தியதுதான் என்றும் கூறியுள்ளது. மேலும், அஜித் ட்ரோனை இயக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.